பிரபுதேவாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தெரியுமா?

வெள்ளி, 31 ஜூலை 2015 (20:45 IST)
ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மணின் அடுத்தப் படத்தை பிரபுதேவா தயாரிப்பதாக சென்ற வாரம் வெளியான செய்தியை நீங்கள் படித்திருக்கலாம். இந்நிலையில் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பிரபுதேவா அறிவித்துள்ளார்.
 

 
பிரபுதேவா ஸ்டுடியோஸ். இதுதான் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச தரத்திலான கதைகளை தயாரிக்க முடிவு செய்துள்ளார் பிரபுதேவா. திறமையானவர்கள் எந்த மொழியில் இருந்தாலும் அவர்களை ஊக்குவிப்பதாக இந்த நிறுவனத்தில் செயல் இருக்கும். தமிழ் மட்டுமின்றி பிறமொழிப் படங்களையும் தயாரிக்கயிருப்பதாக கூறினார் பிரபுதேவா.
 
பிரபுதேவா தற்போது அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். தொடர்ந்து இந்திப் படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அவரது முதல் தயாரிப்பு தமிழா இல்லை இந்தியா இல்லை பிற மொழிப் படமா என்பதை ஆகஸ்ட் 3 -ஆம் தேதி முறைப்படி அறிவிக்க உள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்