விரைவில் மணமகன் ஆகபோகும் பிரபாஸ்!! யார் அந்த மணமகள்??

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (11:56 IST)
'பாகுபலி' படத்தின் மூலம் அசாத்திய நடிப்பை வெளிபடுத்தி புகழை எட்டியவர் பிரபாஸ். இவர் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

 
வருகிற டிசம்பர் மாதம் பிரபாஸின் நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
'பாகுபலி 2' பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டு பிரபாஸ் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
'பாகுபலி 2' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்