காமெடி செய்ய மட்டுமில்லை நடிக்கவே தெரியாமல் தமிழ் சினிமாவில் ஒருவர் வலம் வருகிறார் என்றால் அது பவர் ஸ்டார் என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் சீனிவாசன். இவரது கோமாளித்தனங்களை காமெடி என்று தமிழ் திரையுலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ரஜினியை விமர்சனம் செய்யும் படத்தில் இவரைத்தான் ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் சிங்காரவேலன்.
லிங்கா நஷ்டமடைந்ததை பின்னணியாக வைத்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஒரு படம் தயாரிக்கிறார். லிங்கா போன்ற கதையம்சம் உள்ள படத்தில் சீனிவாசன் நடிக்கிறார். அது தோல்வியடைகிறது. அதனால் விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அதனை சீனிவாசன் என்ன செய்து நிவர்த்தி செய்தார் என்பது கதை. இது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். கூடுதல் தகவல், இந்தப் படத்துக்கு நானும் ஹீரோதான் என்று பெயர் வைத்துள்ளனர்.