பவர் பாண்டியில் கௌரவ வேடத்தில் நடிக்கும் தனுஷ்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:41 IST)
ராஜ்கிரண் நடிக்கும் பவர் பாண்டி படத்தை தயாரித்து இயக்குகிறார் தனுஷ். அவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் இது.


 
 
இந்தப் படத்தில் ராஜ்கிரண் ஸ்டண்ட் மாஸ்டராக வருகிறார். அவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. தனுஷின் வுண்டர்பார் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
 
ராஜ்கிரணை நடிகராக அறிமுகப்படுத்தியவர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா. இப்போது ராஜ்கிரண் மூலம் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் ராஜ்கிரணின் சின்ன வயது கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்