எண்பதுகளின் காதலையும் மோதலையும் சொல்லும் போர்க்குதிரை

சனி, 29 நவம்பர் 2014 (10:41 IST)
எண்பதுகளில் நடக்கும் கதை சார் என்று படம் எடுக்கும் போதே ஒரு பில்டப்பை போட்டு வைக்கின்றனர். எண்பதுகளின் கதையை ஏன் இந்த காலகட்டத்தில் எடுக்க முடியாதா? அதே காதலும், கைகலப்பும்தானே? சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஹேங்ஓவர்தான் இந்த எண்பதுகளின் கதை.
போர்க்குதிரை படமும் எண்பதுகளில் நடக்கும் கதை. அப்பாவி இளைஞனுக்கும், அராஜகப் பேர்வழிகளுக்கும் நடக்கும் மோதல்தான் போர்க்குதிரை. நடுவில் காதலும் இருக்கிறது.
 
இயக்குனர் ஸ்ரீபிரவீன் கூறுவதை கேட்டால் போர்க்குதிரையில் அதிகம் பயணிப்பவர் படத்தின் நாயகி சாந்தினி. படத்தின் கதை இவர் மீதுதான் ட்ராவல் செய்கிறதாம் (வெயிட்டான கதையாக இருந்து சாந்தினி நசுங்கிடப் போகிறார்). சித்து பிளஸ் 2, நான் ராஜாவாகப் போகிறேன் என்று சாந்தினி இதற்கு முன் நடித்த இரு படங்களும் ப்ளாப். மாறாக போர்க்குதிரை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது.
 
நாமும் நம்புவோம். போர்க்குதிரையோ மட்டக்குதிரையோ... ஜெயிக்கிற குதிரைக்குதானே இங்கே மதிப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்