பூஜை - அடிதடி கொஞ்சம் ஓவர் டோஸ்தான்

புதன், 22 அக்டோபர் 2014 (18:19 IST)
கோவிலுக்கு தானமாகக் கொடுத்த நிலத்தை வில்லன்களிடமிருந்து மீட்பதுதான் படத்தின் கதை.
 
 
இந்த ஒருவரி கதையை ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை வெடிக்க வெடிக்க சொல்லியிருக்கிறார் ஹரி. 
 
ஹரியின் படங்களில் வரும் கூட்டுக் குடும்பம், காதல், சென்டிமெண்ட், போலீஸ், கூலிப்படை, டாடா சுமோ, அரிவாள் என்று சகலமும் இதில் உள்ளது. இளைய தலைமுறைக்கு அரவணைச்சு போப்பா என்பவர்களைவிட அடிச்சிட்டு வாடா என்பவர்களைதான் பிடிக்கிறது. பூஜை அந்த ரகம். அதனால் படத்தை ஆரவாரமாக கண்டு களிக்கிறார்கள்.
 
வீட்டுப் பெண்களே விஷாலிடம், அவன் கையை ஒடிச்சிடு, தலையை எடுத்திடு என்று உசுப்பேத்தி விடுவது ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடிக்குமா? ஒருவாரம் கழிந்த பிறகே இந்த கேள்விக்கான பதில் தெரியவரும். அதற்குள் படம் போட்ட பணத்தை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.
 
விஷாலின் படத்துக்கு ஆந்திராவில் சின்ன வரவேற்பு உண்டு. ஸ்ருதியும் இருக்கிறாரா... தமிழ்நாட்டைவிட ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆந்திராவை நம்பி எடுத்தது போல் அடிதடி கொஞ்சம் ஓவர் டோஸ்தான். 
 
இந்தப் படத்துக்கு நமது மதிப்பெண் 1.5 / 5

பூஜை படத்தைப் பார்க்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

http://bit.ly/Poojai-Tix

வெப்துனியாவைப் படிக்கவும்