பொங்கல் ரிலீசான திரைப்படங்களின் வசூல் நிலவரம்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (16:51 IST)
பொங்கல் பண்டிகைக்கு விஜயகாந்த் மகனின் மதுரவீரன், அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், விக்ரமின் ஸ்கெட்ச், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் குலேபகாவலி உள்ளிட்ட 5 படங்கள் திரைக்கு வர தயாராக இருந்தன. 

ஆனால் தமிழகத்தில் உள்ள 48% சதவீத தியேட்டர்களை தானா சேர்ந்த கூட்டம், 30% சதவீதமான தியேட்டர்களை ஸ்கெட்ச், 18% சதவீத தியேட்டர்களை குலேபகாவலி படங்கள் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் மதுரவீரன் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல்  திரைப்படத்தின் ரிலீஸ் டேட் தள்ளி வைக்கப்பட்டது
 
இந்நிலையில் நேற்று வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் சொடக்கு போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழகத்தில் 450க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு முதல் நாள் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 6 கோடி ரூபாய்.
 
ஸ்கெட்ச் படத்தில் விக்ரம்- தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். சூரி, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன், வேல ராமமூர்த்தி, மதுமிதா நடித்துள்ள இப்படத்தை மூவிங் ப்ரேம் நிறுவனம் தயாரித்துள்ளது. சிலம்பரசன் நடித்து வெளியான "வாலு" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விஜய் சந்தர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரமின் ஸ்கெட்ச் திடைப்படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் சுமார் 4.50 கோடி.
 
குலேபகாவலி படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்று விமர்சனம் வந்திருக்கிறது. இத்திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற மொத்த வசூல் சுமார் 30 லட்சம் மட்டுமே.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்