தகிட ததுமி பாடலை பாடிய சிறுவன் - நன்றி தெரிவித்த கமல்ஹாசன் (வீடியோ)

வியாழன், 8 ஜூன் 2017 (15:29 IST)
போலந்து நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் வெகுநாட்களாக, இந்திய சினிமாவில் இடம்பெற்ற பல பாடல்களை பாடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறான்.


 

 
சமீபத்தில் அந்த சிறுவன் கமல்ஹாசன் நடித்திருந்த சலங்கை ஒலி படத்தில் இடம்பெற்ற தகிட ததுமி பாடலை, தெலுங்கு மொழியில் பாடி வெளியிட்டுள்ளான். மேலும், அதை கமலுக்கு டிவிட் செய்த அந்த சிறுவன், இது உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்து தெரிவியுங்கள் என கூறியிருந்தான்.
 
இதனையடுத்து, இந்த வீடியோவை கண்ட கமல், இந்த பாடலை தெலுங்கு மொழியில் பல சிறுவர்கள் பாடியுள்ளனர். ஆனால், நீ பாடியது ஸ்பெஷல்.  இந்த பாடலைப் பாடியதற்கு நன்றி என அந்த சிறுவனை வாழ்த்தியுள்ளார்.
 
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்