உதயநிதி நடிக்கும் பொதுவாக என் மனசு தங்கம்

திங்கள், 28 நவம்பர் 2016 (16:02 IST)
ரஜினி படத்தின் பெயர் இல்லையென்றால் ரஜினி படத்தின் பாடல் வரி. ஏதாவது ஒன்றை படப்பெயராக வைப்பது இப்போதும் பேஷனாகத்தான் உள்ளது. 


 
 
உதயநிதியின் புதிய படத்தின் பெயர், முரட்டுகாளையில் இடம்பெற்ற பாடல் வரியான, பொதுவாக என் மனசு தங்கம்.
 
தளபதி பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இதுதவிர எழில் இயக்கத்தில், சரவணன் இயக்க பயமேன் படத்திலும் உதயநிதி நடித்து வருகிறார்.
 
இந்தப் படங்களுக்குப் பிறகு லைக்கா தயாரிப்பில் கௌரவ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்