மிஷ்கினின் ‘பிசாசு 2’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 29 ஜூலை 2021 (20:07 IST)
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
‘பிசாசு 2’படத்தில் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா மற்றும் பிசாசு கேரக்டரில் பூர்ணா நடித்து வருவதாகவும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கார்த்திக்ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்