உலக அளவில் 100 கோடியை கடந்த பிக்கு

புதன், 27 மே 2015 (19:08 IST)
ஷோஜித் சிர்காரின் பிக்கு 19 தினங்களை கடந்த நிலையில் 100 கோடிகளை திரையரங்குகளின் மூலம் வசூலித்துள்ளது.


 

காலை முதல் இரவுவரை கழிப்பறையில் கழிக்கும் வயதான தந்தை, அரைகுறை மனதுடன் அவரை பராமரிக்கும் வேலைக்குச் செல்லும் மகள். இவர்களின் கொல்கத்தா பயணத்தில் இணைந்து கொள்ளும் கார் டிரைவர். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் வைத்து ஷோஜித் எடுத்திருக்கும் பிக்கு, ஸ்டார் நடிகர்களின் படங்களைவிட வசூலில் அள்ளுகிறது.

இந்தப் படம் நேற்று 19 தினங்களை நிறைவு செய்தது. நேற்றுவரை இந்திய திரையரங்குகளில் 73.49 கோடிகளை வசூலித்துள்ளது. வெளிநாடு வசூலையும் சேர்த்தால், 102.8 கோடிகள்.

அடிதடி ஆக்ஷன் படங்கள் மண்ணைக் கவுவும் நேரம் ஷோஜித்தின் படம் பட்டையை கிளப்புகிறது. வரவேற்கப்பட வேண்டிய வெற்றி.
 

வெப்துனியாவைப் படிக்கவும்