பிச்சைக்காரனுக்கு பச்சைக்கொடி

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (20:27 IST)
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பிச்சைக்காரனுக்கு வியாபார வட்டத்தில் நல்ல வரவேற்பு. மார்ச் 4 -ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு வாங்கியிருக்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம்.
 

 
விஜய் ஆண்டனியின் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்கள் நஷ்டத்தை தராதவை. அந்த நம்பிக்கையில்தான் பிச்சைக்காரனை விரும்பி வாங்கியுள்ளனர். சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்து, வாpச்சலுகை உத்தரவாதமும் சேர, படத்தை வாங்க பலத்த போட்டி.
 
கடைசியாக கிடைத்த தகவல், மார்ச் 4 வெளியாகும் இந்தப் படம் 300 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். 
 
சைலண்டாக சாதித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

வெப்துனியாவைப் படிக்கவும்