பவன் கல்யாண் படத்தின் மூலம் தெலுங்குக்கு செல்லும் அனிருத்

வெள்ளி, 4 நவம்பர் 2016 (14:33 IST)
அனிருத்துக்கு தெலுங்கில் இசையமைக்க பல வாய்ப்புகள் வந்தன. முக்கியமாக இயக்குனர் த்ரிவிக்ரம் தன்னுடைய அ ஆ படத்துக்கு அனிருத்தான் இசையமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

 
அனிருத்தின் இசைப்பயணம் காரணமாக அந்தப் படத்துக்க இசையமைக்க முடியாமல் போனது. 
 
முயற்சியில் சற்றும் தளராத த்ரிவிக்ரம் தனது அடுத்தப் படத்தில் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பது, பவன் கல்யாண். 
 
இந்தமுறையாவது அனிருத் வாக்குத்தந்தபடி இசையமைப்பாரா இல்லை ஏதாவது இசைப்பயணம் திசை திருப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்