லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்தல.. பத்தல..” பாடலில் இடம்பெற்றிருந்த ஒன்றியத்தின் தப்பாலே போன்ற அரசியல் வரிகள் படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டு உள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.