கன்னடத்தில் அறிமுகமாகும் பார்த்திபன்

புதன், 15 ஏப்ரல் 2015 (13:14 IST)
பார்த்திபன் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு மொழி கடந்தும் வாய்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே மலையாளப் படங்களில் நடித்துள்ளார். முதல்முறையாக கன்னடத்திலும் நடித்து வருகிறார்.
 
பார்த்திபன் கன்னடத்தில் அறிமுகமாகியிருக்கும் படம், தாதா இஸ் பேக். சந்தோஷ் என்பவர் இயக்கம். பார்த்திபனே இந்தப் படத்துக்கு டப்பிங் பேசவிருப்பதால் இப்போது கன்னடம் படித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்