எனக்கு தெரிந்து பாரதிராஜா ஒரு நல்ல மனிதரே தவிர நல்ல நடிகர் இல்லை. அவருடைய மிக சிறப்பான விஷயம் அவர் மற்றவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பாரே தவிர, அவர் நடிக்கவே மாட்டார். நான் சொல்வது சினிமாவில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும், மேடையிலும் எங்கேயுமே நடிக்கத் தெரியாத அப்ராணி மனிதர் அவர். அதனால் தான் அவருக்கு நிறைய பிரச்சனைகள் வரும்.