'இந்தியன் 2’ படத்தை பார்த்துவிட்டு ‘டீன்ஸ்’ படத்தை பார்க்க வாருங்கள்: பார்த்திபன் வேண்டுகோள்..!

Mahendran

வெள்ளி, 5 ஜூலை 2024 (14:12 IST)
கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம், பார்த்திபன் நடித்த இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படமும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ’இந்தியன் 2’ படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டு அதன் பிறகு ‘டீன்ஸ்’ படத்தை பார்க்க வாருங்கள் என்று நடிகர் இயக்குனர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
நண்பர்களே! இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால், எனக்கு நீங்களே! இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் ’டீன்ஸ்’ ஜூலை 12 முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள், சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள், சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே களத்தில் நிற்கிறேன்! 
 
நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை ரிசர்வேஷன் தொடங்கிய உடனேயே காட்டுங்கள். நானே கமல் சாரின் தீவிர ரசிகன் தான். இந்தியன் 2வை இருமுறை பார்த்து விட்டாவது நம் ’டீன்ஸ்’ படத்தை கண்டு கொள்ளுங்கள். 
 
டீன்ஸ் அனைவரும் இந்தியனை பார்த்து பாராட்டி மகிழ வேண்டும். அதே போல இந்தியன்ஸ் அனைவரும் டீன்ஸ்-ஐ... உளப்பூர்வமான இவ்வேண்டுகோளை மீறிய விளம்பரம் நானென்ன செய்திட முடியும்? இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு முதலில் ஷேர் செய்யுங்கள் ப்ளீஸ் 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்