பரிதாபங்கள் கோபிக்கு நிச்சயதார்த்தம்… இணையத்தில் வைரலான புகைப்படங்கள்

சனி, 11 ஜூன் 2022 (15:47 IST)
பரிதாபங்கள் சேனல் மூலம் பொழுதுபோக்கு வீடியோக்களைப் பதிவேற்றி பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர் நண்பர்கள்.

தமிழில் யுடியூப் சேனல்கள் பிரபலம் ஆன காலத்தில் இருந்து சூப்பர் ஸ்டார்களாக வலம் வருபவர்கள் கோபியும் சுதாகரும். இவர்கள் இருவரும் முதலில் மெட்ராஸ் செண்ட்ரல் சேனலில் இணைந்து வீடியோக்களைப் போட்டு வைரல் ஆகினர். பின்னர் தனியாக பரிதாபங்கள் என்ற சேனலை தொடங்கி நடத்தி வருகின்றனர். அது தவிர சில படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த இரட்டையரில் சுதாகருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தற்போது கோபிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்