பாபநாசத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் நடிக்கும் கங்கனா ரனவத், சயிப் அலிகான்

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (19:50 IST)
பாபநாசம் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்-இல் கங்கனா ரனவத் மற்றும் சயிப் அலிகான் நடிக்கிறார்கள்.
 
ஜப்பான் நாவலான, த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் -ஐ தழுவி 2008 -இல் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற படம் எடுக்கப்பட்டது. அப்படம் பிறகு பெர்பெக்ட் நம்பர் என்ற பெயரில் சிறிது மாற்றங்களுடன் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் சாயலில் ஜீத்து ஜோசப் இயக்கிய படம்தான் த்ரிஷ்யம். தமிழில் கமல் நடிப்பில் பாபநாசமாக தயாராகியுள்ளது.

 
த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் நாவலை இந்தியில் படமாக்கும் உரிமையை ஏக்தா கபூரின் பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது. த்ரிஷ்யம் மற்றும் பாபநாசம் படங்கள் அதேசாயலில் தயாரானதும் அவர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
 
ஜப்பான் நாவல் அதே பெயரில் இந்தியில் தயாராகிறது. அதில் கங்கனா ரனவத், சயிப் அலிகான் நடிக்கின்றனர். சுஜாய் கோஷ் படத்தை இயக்குகிறார். ஏக்தா கபூர் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்