பாகுபலி படத்தில் தமன்னாவுக்கு வெயிட்டான ரோலும், அனுஷ்காவுக்கு லைட்டான ரோலும் தந்திருந்தார் ராஜமௌலி.
இரண்டாவது பாகத்தில் அப்படியே வைஸ் வெர்சா. தமன்னாவுக்கு லைட், அனுஷ்காவுக்கு வெயிட்.
இதுபற்றி யாராவது கேள்வி கேட்டால், தமன்னாவின் மூக்கு விடைக்கிறது.
பிளாஷ்பேக் காட்சியில் அனுஷ்காதான் பிரதானமாக வருகிறார். ஆனால் பிளாஷ்பேக் காட்சி முடிந்த பிறகு என்னுடைய ரோல்தான் முக்கியமாக வருகிறது.
இரண்டாவது பாகத்திலும் எனக்குத்தான் முக்கியத்துவம் என்று முறைக்கிறார். பாகுபலிக்குப் பிறகே தமன்னாவால் கொஞ்சம் நடிக்கவும் முடியும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது.
தமன்னாவும், பாகுபலியே என்னுடைய முதல் படம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.