ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் ஏற்காததால் மாஸு என்கிற மாசிலாமணியாக பெயரை மாற்றினர். அதுவும் செல்லுபடியாகாமல் மாசு என்கிற மாசிலாமணியாக மூன்று நாளில் பல பெயர்கள் மாறியது வெங்கட்பிரபுவின் படம். அதேபோன்றதொரு நிலை பா.விஜய்யின் படத்துக்கு ஏற்படுமா?
பா.விஜய் ஹீரோவாக நடித்த இரு படங்களும் தோல்வியை தழுவ, மூன்றாவது படம் வெளியாகாமலே உள்ளது. அதனால் அவரே கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம்தான், ஸ்ட்ராபெர்ரி. 30 சதவீத வரிச்சலுகை இல்லையென்றால் மாஸ் நடிகர்களின் படங்களையே விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஸ்ட்ராபெர்ரியை எப்படி அவர்கள் விரும்பி வெளியிடுவார்கள்?