பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து குளிர் 100 படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் உருவாக உள்ள 90 எம்.எல் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியா, ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரது காதலை ஏற்க மறுத்ததால் தற்கொலை முயற்சி வரை சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் மன அழுத்தம் அதிகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலேயே சென்றுவிட்டார் ஓவியா.