ரஜினிக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?

வியாழன், 18 மே 2017 (14:35 IST)
விஷால் அறிவித்துள்ள காலவரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், ‘ரஜினிக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு  நியாயமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் சினிமா உலகினர்.

 
மத்திய – மாநில அரசுகளிடம், சினிமாத்துறைக்கு வேண்டிய சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளித்தார்  தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால். அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 30ஆம் தேதி  முதல் சினிமா தொடர்பான அனைத்து சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் என  அறிவித்தார்.
 
ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை இதில் கலந்துகொள்ள மாட்டோம்  என வெளிப்படையாகவே அறிவித்து விட்டன. மற்ற சங்கங்களுக்கும் இதில் விருப்பமில்லை. ஆனால், நாளை ரிலீஸாவதாக  இருந்த ‘வனமகன்’ படத்தை மட்டும் தன்னுடைய முயற்சியால் தள்ளிவைத்து விட்டார் விஷால்.
 
இந்நிலையில், ரஜினி – பா.இரஞ்சித்தின் புதிய படம், வருகிற 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தனுஷ் தயாரிக்கும் இந்தப்  படத்துக்காக, மும்பையின் தாராவி போல செட் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினியே 28ஆம் தேதி படம்  தொடங்கும் என தெரிவித்திருக்கிறார். அப்படியானால், அந்த படக்குழுவினர் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத்  தெரிகிறது. எனவே, ரஜினிக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா எனப் புலம்புகின்றனர் மற்றவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்