ஏப்ரல் 29 திரைக்கு வரும் உதயநிதியின் மனிதன்

வியாழன், 31 மார்ச் 2016 (17:30 IST)
இந்தியில் வெளியான ஜாலி எல் எல் பி படத்தை தமிழில் உதயநிதி நடிப்பில், மனிதன் என்ற பெயரில் எடுத்துள்ளனர். 


 
 
என்றென்றும் புன்னகை அஹமத் படத்தை இயக்கியுள்ளார். வழக்கம் போல தயாரிப்பு உதயநிதியின் ரெட் ஜெயண்ட்.
 
உதயநிதியின் அனைத்துப் படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜே இசையமைத்திருந்தார். முதல்முறையாக மனிதன் படத்தில் அவர் இல்லை. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் மற்றும் டீஸரை ஏப்ரல் 7 -ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
 
உதயநிதியுடன் ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஏப்ரல் 29 வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்