"ஓ மை கடவுளே" படத்தை டிவியில் பாருங்க... எப்போ ? எந்த சேனனில் தெரியுமா?

திங்கள், 13 ஏப்ரல் 2020 (09:14 IST)
அஸ்வத் மாரிமுத்து இயக்கி அசோக் செல்வன் நடித்துள்ள "ஓ மை கடவுளே" படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ள இப்படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் - ரித்திகா சிங் பின்னர் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதே இப்படத்தின் கசையம்சம். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ள இப்படம் காதலர் தினத்தின் ஸ்பெஷலாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. பிரண்ட்ஷிப், காதல் கல்யாணம் , காமெடி என அத்தனை அம்சங்களும் கலந்திருந்த இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடினர்.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டிவி சேனலான ஜீ நிறுவனம் கைப்பறியிருந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கை வீட்டில் இருந்தபடியே சிறப்பாக கொண்டாட வரும் ஏப்ரல் 24 தேதி ஜீ5 சேனலில் இந்த படம் வெளியாகவுள்ளது என்று படத்தின் ஹீரோ அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்