இந்தியாவில் சுயஇன்பத்துக்கு தடை - பிரதாப் போத்தனின் காட்டமான கமெண்ட்

புதன், 5 ஆகஸ்ட் 2015 (12:30 IST)
மத்திய பாஜக அரசாங்கம் 857 பலான இணையதளங்களுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. இது அனைத்துத் தரப்பிலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
 
ஒருபுறம் ஆபாச இணையதளங்களை தடை செய்துவிட்டு, பாலியல் வழக்கில் குற்றவாளியான ஆசாராம் பாபுவை பாஜக ஆளும் மாநிலத்தின் பாடத்திட்டத்தில் காந்தி, விவேகானந்தர் போன்ற மகான்களின் வரிசையில் வைத்திருக்கிறார்கள் என பாஜகவின் இரட்டை நிலையை சாடியிருக்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.
 
இயக்குனர் ராம் கோபால் வர்மா, மத்திய அரசின் இந்தச் செயலை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயலோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தனும் அரசின் இந்தத் தடையை கடுமையாக சாடியுள்ளார். 
 
"இந்தியாவில் சுயஇன்பம் தடை செய்யப்பட்டுள்ளது. அடுத்து காயடித்தலாக இருக்கும். இந்தியா குலுக்காமல் இப்போது ஒளிர்கிறது" என மிகக்கடுமையாக கண்டித்துள்ளார். இப்படியே போனால் சிந்திக்கவும் அனுமதி வாங்க வேண்டிவரும். அடுத்து கஜுராகோவை தகர்ப்போம் என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 
 
(சமீபத்திய செய்தி. தடை செய்யப்பட்ட 857 ஆபாச இணையதளங்களின் தடை நீக்கப்பட்டுள்ளது) 

வெப்துனியாவைப் படிக்கவும்