புதிய சங்க நிர்வாகிகள் மீது ஊழல் புகார், சங்க கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகோடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 27-ந்தேதி பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. நாடக நடிகர்கள் உள்பட மொத்தம் 3,500 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.