சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக காளி கோவில் செட் அமைத்தனர். அதில் சல்மான் கானுடன், ஷாருக்கானும் கலந்து கொண்டார். வெறும் அரங்கம்தானே... இருவரும் ஷு அணிந்தபடியே நிகழ்ச்சியை நடத்தினர். இப்போது இதனையே ஒரு பிரச்சனையாக்கியிருக்கிறது, இந்து மகாசபை என்ற அடிப்படைவாத அமைப்பு.