இந்நிலையில், இப்படதில் தனது கதையை வைத்து தனக்கே தெரியாமல் இப்படத்தை முடித்து இதை ஓடிடியில் வெளியிட உள்ளதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஜமீல் வழக்கு தொடர்ந்திருருந்தார்.
மேலும், இப்படத்தில் தனக்கு ஊதியாக தர ஒப்புக்கொண்ட ரூ 24 லட்சத்தில் வெறும் 8 லட்சத்து 15 ஆயிரம்தான் தந்துள்ளனர். மீதிப்பணத்தை தர உத்தரவேண்டுமெனவும், இப்படத்தை என்னை எடுக்க விடாமல் முடித்ததற்கான ரூ. 10 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடவேண்டுமென ஜமீல் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் ஜமீலுக்கு சம்பள பாக்கியில் ரூ.5 லட்சத்து 50அ ஆயிரம் வழங்கத் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதை அடுத்து ஜமீல் அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது. எனவே இயக்குநர் சங்கத்தில் இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுத்துவருவதாக கூறாப்பட்டது. எனவே இப்படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்கக் கூறிய மனுவை தள்ளுபட்டி செய்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தர்விட்டார்.