நிவேதா தாமஸா இப்படி? கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவன ஈர்ப்பு!

சனி, 12 செப்டம்பர் 2020 (16:47 IST)
ரஜினி மற்றும் கமல் ஆகிய நடிகர்களுக்கு மகளாக நடித்து பிரபலமான நடிகை நிவேதா தாமஸ் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா தாமஸ். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கும் வி என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ள கிளப் சாங்க் ப்ரோமோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த பாடலில் செம்ம டான்ஸ் ஆடி இளைஞர்களை கவர்ந்துள்ளார் நிவேதா.

இதையடுத்து இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தும் புகைப்படங்களை வெளியிட்டும் வந்த நிவேதா தாமஸ் இப்போது கவர்ச்சியில் இறங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்