விஜய் படம்... ஜோதிகாவுக்கு பதில் நித்யா மேனன்

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (13:15 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலிருந்து ஜோதிகா விலகியதால் அவருக்குப் பதில் நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 -வது படமாக தயாராகி வருகிறது. ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா இதில் நடிப்பதாக அறிவித்து படப்பிடிப்பையும் தொடங்கினர். இந்நிலையில் ஜோதிகா படத்திலிருந்து விலகினார்.

தற்போது அவருக்குப் பதில் நித்யா மேனனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்