கணவருக்காக படம் தயாரிக்கும் நிரோஷா

வெள்ளி, 28 நவம்பர் 2014 (15:38 IST)
ராம்கி - நிரோஷா திருமண பந்தம் எந்த பந்தாவும் இல்லாமல் முக்கியமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருபது வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பரஸ்பர புரிதல் இல்லாமல் இது சாத்தியமில்லை.
 
திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு நிரோஷா தொலைக்காட்சியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நடித்தார். அதன் பிறகு சில திரைப்படங்கள். இப்போது மீண்டும் அதே சின்ன பாப்பா பெரிய பாப்பா நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொடரப் போகிறார். அவரை அப்போதும் இப்போதும் தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தவர் நிரோஷாவின் சகோதரி, ராதிகா சரத்குமார்.
 
ராம்கியும் இப்போது பரவலாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது லட்சியமே - நல்லவேளை மீண்டும் ஹீரோவாக வேண்டும் என்பதில்லை. ஒரு படத்தை இயக்கியாக வேண்டும். அவருடைய லட்சியத்தை நிறைவேற்ற அடுத்த வருடம் நானே ஒரு படத்தை தயாரிப்பேன் என்றார் நிரோஷா.
 
ஆகா, இவரல்லவோ லட்சிய மனைவி.

வெப்துனியாவைப் படிக்கவும்