நெய்வேலி செல்பியை ’மாஸ்டர்’ படத்தில் பயன்படுத்திய லோகேஷ்: வெளிவராத தகவல்

புதன், 6 ஜனவரி 2021 (17:36 IST)
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. விஜய் ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே மாஸ்டர் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் என்பதும் மாஸ்டர் ரிலீஸ் நேரத்தில் இதைவிட மிகப் பெரிய கொண்டாட்டம் இருக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் நெய்வேலியில் ரசிகர்கள் மத்தியில் ஒரு செல்ஃபி எடுத்தார் என்பதும் அந்த செல்பி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது என்பதும் அதிக அளவில் ரீட்வீட் செய்யப்பட்ட செல்பி என டுவிட்டரே அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த செல்பியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் அந்த காட்சி வரும்போது திரையரங்குகளில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க தான் ஆவலுடன் இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது
 
இந்த செல்பி புகைப்படம் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெறும் காட்சியை காண ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்