ஃபார் அடல்ஸ் ஒன்லி - பல்டி அடித்த ஃபைசல் சைஃப்

வியாழன், 25 ஜூன் 2015 (14:42 IST)
பிரபலங்களின் பெயர்களை வைத்து தனது படத்தை விளம்பரப்படுத்தி, அந்த விளம்பரத்திலேயே படத்தை ஓட்டுவதுதான் இந்திப்பட இயக்குனர், ஃபைசல் சைஃபின் வியாபார திட்டம். மல்லிகா, ரஜினிகாந்த் உள்பட பலர் இவரது வியாபார வளையத்தில் சிக்கியிருக்கிறார்கள்.
 
ஃபைசல், ஃபார் அடல்ஸ் ஒன்லி என்ற படத்தை கிம் கர்தர்ஷியானை வைத்து எடுப்பதாகவும், தனுஷ் நடிப்பதாகவும் சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது. அப்போதே நாள் தெளிவாக கூறினோம். தனுஷ் பெயரை வைத்து ஃபைசல் நடத்தும் மோசடி இது என்று. அதேபோல்தான் நடந்திருக்கிறது.
 
ஃபார் அடல்ஸ் ஒன்லி படம் குறித்து தெரியாது என தனுஷ் தரப்பு கைவிரித்ததும் வழக்கமான பல்டிகளில் ஒன்றை போட்டுள்ளார் ஃபைசல். தனுஷ் சிறந்த நடிகர். படத்தை தமிழ், தெலுங்கில் எடுப்பதால் அவரைப் போன்ற ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும். ஆனால், அவரிடம் இதுகுறித்து இன்னும் பேசவில்லை என பிளேட்டை திருப்பி போட்டிருக்கிறார்.
 
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கிம் கர்தர்ஷியானும் இந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை. இப்போதே பல்டி அடிப்பதற்கான வேலைகளை ஃபைசல் ஆரம்பித்திருக்கிறார். கிம்மிடம் இன்னும் பேசவில்லை. எப்படியும் கெஸ்ட் ரோலிலாவது அவரை நடிக்க வைப்போம் என்று மாற்றிப் பேசி வருகிறார்.
 
உண்மையில் இந்தப் படத்தில் துபாயைச் சேர்ந்த ஒரு மாடலைதான் நடிக்க வைக்கிறார்கள். கிம் கர்தர்ஷியான் எல்லாம் ஃபைசலின் டுபாக்கூர் பில்டப். ஏமாறாதீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்