மீண்டும் அம்மாவான நீலிமா ராணி - என்ன குழந்தை தெரியுமா?

வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:17 IST)
தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
 
'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும், பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தைக்கு அம்மாவாகியுள்ளார் நீலிமா. கடந்த 5ம் தேதி குழந்தை பிறந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்