தலைவர் 168: இதுவரை நடிக்காத ரோலில் நயன்தாரா - படம் பக்கா மாஸ் தான்!

திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:41 IST)
Thalaivar 168

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ்,சூரி,பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
 
இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.  படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. 
 
அதாவது, இந்த படத்தில் நடிகை நயன்தாரா இதுவரை நடித்திராத வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளது. முதன் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர்  கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்க வைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்