தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது சர்வ சாதரணம். நயன்தாரா தற்போது உதயநிதியுடன் நண்பேண்டா படத்திலும், சிம்பு ஜோடியாக இது நம்ம ஆளு படத்திலும் நடிக்கிறார்.
சூர்யாவுடன் மாஸ், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது மதுக்கடைக்கு போய் பீர் பாட்டில் வாங்கும் படங்கள் இன்டர்நெட்டிலும், வாட்ஸ் அப்களிலும் பரவி வருகிறது. மதுக்கடையில் நிஜமாகவே பீர் வாங்கினாரா அல்லது படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டதா என்று தெரியவில்லை.