லாரன்ஸ் ஜோடியாக நயன்தாரா...?

ஞாயிறு, 1 மே 2016 (10:33 IST)
நயன்தாராவின் காட்டில் அடைமழை. அவரும் சின்ன நடிகர், சீனியர் நடிகர் என்று வித்தியாசம் பார்க்காமல் வரிந்து கட்டுகிறார். விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோருடன் நடித்தவர் விரைவில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க உள்ளார்.


 

 
சமீபத்திய தகவல், லாரன்சுடனும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
 
லாரன்சுக்கு கதை சொன்ன இயக்குனர் இந்த கதைக்கு நயன்தாரா நடித்தால் சரியாக இருக்கும் என்று, லாரன்சின் ஒப்புதலுடன் நயன்தாராவிடம் பேசியிருக்கிறார். நயன்தாரா நம்முடன் சேர்ந்து நடிப்பாரா என்று லாரன்சுக்கு சந்தேகம். அங்கேதான் எதிர்பாராத சர்ப்ரைஸ்.
 
லாரன்ஸ்கூட நடிக்க ஆட்சேபணையில்லை என்று பச்சைக்கொடி காட்டியுள்ளார் நயன். 
 
ஜீ.வி.பிரகாஷ்கூட முயற்சி செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்