காஸ்மோரா படத்தில் நயன்தாராவின் ராணி தோற்றம்..!!

வியாழன், 6 அக்டோபர் 2016 (12:47 IST)
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் காஸ்மோரா திரைப்படத்தில் நயன் தாரா “ரத்னமஹா தேவி”என்ற வரலாற்றுக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


 
 
இப்படத்தின் இயக்குனர் கோகுல். நடிகர் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் சரித்திர பிண்ணனியை கதையாக திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தில் நடிகர் கார்த்தி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் என்பது சமீபத்தில் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்தது. நயன் தாராவும் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் காஸ்மோரா படத்தில் நயன்தாரா நடித்துள்ள ஒரு கதாபாத்திரத்தின் தோற்றம் தற்போது வெளியாகியுள்ளது.”ரத்னமஹா தேவி”என்ற பெயருடன், ஒரு ராணி போன்ற தோற்றத்தில் நயன்தாரா அரியாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்