நயன்தாராவின் நண்பேன்டா டீஸர் - நவ.27 வெளியாகிறது

செவ்வாய், 18 நவம்பர் 2014 (09:16 IST)
நயன்தாரா, உதயநிதி நடித்திருக்கும் நண்பேன்டா படத்தின் டீஸர் நவம்பர் 27 வெளியாகிறது.
இது கதிர்வேலன் காதல் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா, உதயநிதி இணைந்து நடித்திருக்கும் படம் நண்பேன்டா. கும்பகோணத்தில் இதன் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் உதயநிதி நயன்தாராவை ஒருதலையாக காதலிப்பதாகவும், நயன்தாரா அந்தக் காதலை மறுத்ததால் உதயநிதி உடைந்து போனதாகவும் கிசுகிசு எழுந்தது. 
 
இந்த வதந்திக்கு சில தினங்கள் கழித்து பாடல் காட்சிக்காக பழைய கலகலப்புடன் உதயநிதியும், நயன்தாராவும் படயூனிட்டுடன் வெளிநாடு கிளம்பிச் சென்றனர்.
 
அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 27 படத்தின் டீஸரை வெளியிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்