நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்: திரையுலகினர் வாழ்த்து

திங்கள், 30 ஜனவரி 2017 (12:17 IST)
நடிகை சமந்தா- நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.



தெலுங்கு திரையுலகில் முன்னனி நாயகனாக வலம் வருபவர் நாகர்ஜூன். இவரது மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு திரையுலகில் முன்னணி  நடிகராக திகழ்கிறார். இவரும் நடிகை சமந்தாவும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நாகசைதன்யா சமந்தா திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இரு குடும்பங்களின் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் திரையுலகினர் எவரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்