நாளை மாலை 4 மணிக்கு சூர்யாவின் 'வீணா போனா' ரிலீஸ்

புதன், 26 ஜூலை 2017 (23:06 IST)
சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சாதனையையும் ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
அனிருத் கம்போஸ் செய்த டியூனுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடலை எழுதியுள்ளார். 'நானா தானா வீணா போனா' என்று தொடங்கும் இந்த பாடல் ரொமான்ஸ் பாடல் என்று கூறப்படுகிறது.
 
சூர்யா, கீர்த்திசுரேஷ், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் செந்தில், சுரேஷ்மேனன், கார்த்திக் ஆகியோர் மிண்டும் ரீஎண்ட்ரி ஆகின்றனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்