நான் பிழைப்பேனா? கெளதம் மேனனிடம் கேட்ட தனுஷ்

வியாழன், 23 மார்ச் 2017 (06:57 IST)
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் மட்டுமே மீதியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் டிரைலர்மற்றும் பாடல் வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.



 


இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 'மறுவார்த்தை பேசாதே' என்ற பாடலின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மறுநாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி 'நான் பிழைப்பேனா? என்று தொடங்கும் பாடலின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற சஸ்பென்ஸ் இந்த பாடலின் டீசரிலாவது உடையுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தனுஷ், மேக்னா ஆகாஷ், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.ஜான் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்