நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (14:52 IST)
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம். அந்த பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இதையடுத்து படத்தை நவம்பரிலேயே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை படத்தில் இடம்பெற்ற பணக்காரன் என்ற செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்