காஜல் அகர்வாலுக்கு முக்கியதுவம்; அஜித்துக்கு நேர்ந்த அவமதிப்பு!!

வியாழன், 20 ஜூலை 2017 (21:37 IST)
அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


 
 
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவருடன், அக்ஷரா ஹாசன், விவேக் ஒப்ராய் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில், இப்படத்தின் இரண்டு சிங்கிள் டிராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது காதலா என துவங்கும் பாடலை கபிலன் எழுதியுள்ளார். 
 
ஆனால், இந்த பாடலை வெளியிட்டுள்ள இசை நிறுவனம் ஒன்று நடிகர்கள் பெயரை பட்டியலிடும் இடத்தில் படத்தின் நாயகனான அஜித்தின் பெயரை கடைசியில் குறிப்பிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்