மகேஷ்பாபு படத்தை இயக்கும் முருகதாஸ்

வியாழன், 26 நவம்பர் 2015 (17:28 IST)
சரியோ தவறோ... பிரபலங்கள் குறித்த செய்தியை தவறாமல் வெளியிடுவது தான் இன்றைய பத்திரிகை தர்மம். அந்த தர்மத்தின் பிரதிபலிப்புதான் இந்த செய்தி.


 
 
இந்தியில் அகிரா படத்தை இயக்கிவரும் முருகதாஸ் அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் என ஆந்திராவில் அலறுகிறார்கள். தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக கூறுகிறார்கள்.
 
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனினும், இதுதான் முருகதாஸின் அடுத்தப் படம் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்