மும்பை அரசியல்வாதிகளை எதிர்க்கும் ரஜினி

வெள்ளி, 9 ஜூன் 2017 (11:01 IST)
தான் நடித்துவரும் ‘காலா’ படத்தில், அரசியல்வாதிகளை எதிர்ப்பது போல் நடித்துள்ளாராம் ரஜினி.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. மும்பையில் வாழும் தாதாவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ரஜினி. மெயின் வில்லனாக நானா படேகர் நடித்துள்ளார். அவருக்கு, அரசியல்வாதி வேடமாம். மும்பை மக்களுக்கு மட்டும்  தேவைப்படுவதைச் செய்து கொடுக்கும் நானா படேகர், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஒதுக்கி வைப்பாராம். அதைக்கண்டு கொதித்தெழும் ரஜினி, அவரை எதிர்த்துப் போராடுகிறார்.
 
இந்தக் காட்சிகள்தான் சமீபத்தில் படமாக்கப்பட்டன. தொடர்ச்சியாக 11 நாட்கள் நடித்த ரஜினி, இந்த ஷெட்யூலில் தன்னுடைய போர்ஷன் முடிந்துவிட்டதால் சென்னைக்குத் திரும்பிவிட்டார். மற்ற நடிகர்களை வைத்து ஷூட்டிங்கைத் தொடர்ந்து வருகிறார் பா.இரஞ்சித். சென்னையில் தொடங்க இருக்கும் அடுத்த ஷெட்யூலில் இணைந்து கொள்கிறார் ரஜினி.

வெப்துனியாவைப் படிக்கவும்