மொட்டசிவா கெட்டசிவா ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

செவ்வாய், 7 மார்ச் 2017 (04:47 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் கடந்த மாதமே வெளியாக வேண்டிய நிலையில் இந்த படத்தை எதிர்த்து பைனான்சியர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.





இந்நிலையில் நேற்று நீதிமன்றம் இந்த படத்தை வெளியிடலாம் என்று அனுமதித்துள்ள நிலையில் இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளீயாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 10ஆம் தேதிக்கு பதில் மார்ச் 9ஆம் தேதியே இந்த படம் வெளியாகும் என்றும், ரசிகர்களின் அன்பு கோரிக்கை காரணமாக ஒருநாள் முன்னரே இந்த படம் வெளியாகவுள்ளதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்