மொட்ட சிவா கெட்ட சிவாவில் ராய் லட்சுமி

புதன், 4 மே 2016 (11:30 IST)
லாரன்சுக்கும், ராய் லட்சுமிக்கும் நல்ல நட்பு உள்ளது. லாரன்ஸ் படம் என்றால் அனைவரது முதல் கேள்வி, நாயகி ராய் லட்சுமி என்பதாகவே இருக்கும்.

 
மொட்ட சிவா கெட்ட சிவாவில் லாரன்ஸுக்கு ஜோடி ராய் லட்சுமி கிடையாது. என்றாலும் அவரை தனது படத்தில் இடம்பெறச் செய்ய முயற்சி செய்தார் லாரன்ஸ். நாயகனின் விருப்பம் நடைமுறைக்கு வராமலிருந்திருக்கிறதா தமிழ் சினிமாவில்?
 
ஒரு பாடல் காட்சியில் தன்னுடன் ஆடும்படி லாரன்ஸ் கேட்க, உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் ராய் லட்சுமி. 
 
இவர் தெலுங்கில் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். சமீபத்தில் வெளியான சர்தார் கப்பார்சிங்கிலும் பவன் கல்யாணுடன் ஆடினார். ஆனால், தமிழில் இதுவே முதல்முறை. அதுவும் லாரன்சுடன் என்பதால், த்ரில்லிங்கா உள்ளது என ராய் லட்சுமி கூறியுள்ளார்.
 
த்ரில் எங்களுக்கும்தான்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்