மோகன்லாலின் மகன் பெயர் பிரணவ். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றியிருக்கிறார். அதனால் அவரும் விரைவில் நடிக்க வருவார் என்றுதான் நினைத்தனர். இந்நிலையில் தமிழில் ஜீத்து ஜோசப் கமலை வைத்து இயக்கி வரும் பாபநாசம் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறார். படம் இயக்குவதுதான் பிரணவின் லட்சியமாம்.
இதே லட்சியத்துடன் சினிமாவுக்குள் நுழைந்த கார்த்தி, விஷால், சித்தார்த் எல்லாம் இப்போது முன்னணி ஹீரோக்கள். அந்த விபத்து பிரணவுக்கு நேராமலிருக்கட்டும்.